தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

தினந்தோறும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அப்பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு நஞ்சுண்டாபுரம், தாளியூர், வரப்பாளையம் பகுதியில் லதா, வளர்மதி, ஜீவானந்தனம் ஆகியோரது தோட்டங்களுக்கு அடுத்தடுத்து புகுந்து அங்கு இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றது. மேலும் வரப்பாளையம் ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஜீவானந்தம் எனபவரை துரத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தாளியூர் பகுதியில் மாரண்ணன் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை தின்று சென்றுள்ளது. இதனை தோட்டத்து வீட்டில் அச்சத்துடன் பதுங்கி இருந்தவர் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார் தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

Recent News

Video

எதுக்கு டார்ச் அடிச்ச…? கோவையில் விவசாயியை எச்சரித்த காட்டு யானை…!

கோவை: கோவை தடாகம் பகுதியில் டார்ச் அடித்து பார்த்தவரை நோக்கி வேகமாக வந்த காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், தாளியூர்...
Join WhatsApp