கோவையில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்…

கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

Advertisement

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழ்நாடு முழுவதும் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மறைப்படுவது, அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முதலமைச்சர்களின் புகைப்படங்கள் பேனர்கள் அகற்றுவது, பறக்கும் படை வாகனங்கள் துவக்கி வைப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி தொகுப்பு புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது, மேலும் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன.

Advertisement

அண்ணா சிலை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் மாநகராட்சி பணியாளர்களால் தார்பாய்கள் கொண்டு மூடப்பட்டது. தெற்கு சட்டமன்ற அலுவலகமும் காலி செய்யப்பட்டு தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் புகைப்படம் அவரது பாஜக கட்சி சின்னம் பிரதமர் மோடியின் புகைப்படம் ஆகியவை மறைக்கப்பட்டன.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் GPS பொருத்தப்பட்ட பறக்கும் படை வாகனங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான பவன்குமார் ஆய்வு செய்து அவற்றை துவக்கி வைத்தார்.

Advertisement

தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்படும் பேனர்கள், கட்சி கொடிகள் ஆகியவை அகற்றப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களில் உள்ள பொருட்கள் அனைத்தும் காலி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...