கோவை விமான நிலையத்தில் கார்கள் அகற்றம்; பயணிகள் அவதி!

கோவை: பிரதமர் கோவைக்கு வருவதை முன்னிட்டு விமான நிலையத்தில் நீண்ட நாட்கள் எடுத்துச் செல்லப்படாத கார்களை காவல் துறையினர் அகற்றினர்.

கோவைக்கு நாளை பிற்பகல் பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில் அவர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு மாநகர் முழுவதும் போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி கோவை விமான நிலையம் வர உள்ள நிலையில் இன்றும், நாளையும் கார்களை பார்க்கிங் செய்ய காவல் துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர்.

இதனால் ஏற்கனவே நிறுத்தி விட்டு சென்ற உரிமையாளர்கள் கார்களை எடுக்காததால் அவற்றினை காவல் துறையினரே கிரேன் வாகனங்களை வைத்து அப்புறப்படுத்தி தனியார் பார்க்கிங்கில் கொண்டு செல்கின்றனர்.

இதை தொடர்ந்து உள்ளே வரும் கார்களை விமான நிலையத்தில் நிறுத்தவும் காவல் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கை காரணமாக கார்களை விமான நிலையத்தில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp