பிரதமர் வருகை- கோவையில் கான்வாய் ஒத்திகை

கோவை: பிரதமர் வருகையை ஒட்டி கான்வாய் ஒத்திகை நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க விமான மூலம் கோவைக்கு வருகிறார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கொடிசியா செல்லும் அவருக்கு விமான நிலைய பகுதியிலும் கொடிசியா சாலையிலும் பாஜக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பிரதமர் வருகையை ஒட்டி இந்த பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார் 3000க்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். மேலும் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் நாளை செய்யப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகத்திற்கு செல்லும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கான்வாய் ஒத்திகை நடைபெற்றது.

Advertisement

கான்வாயில் எத்தனை வாகனங்கள் பங்கிறது, எத்தனை நிமிடங்களில் என்ன வேகத்தில் விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகத்தை சென்றடைகிறது, வழிநெடுகும் காவல்துறை பாதுகாப்பு எவ்வாறு செய்யப்பட உள்ளது, போக்குவரத்தை எவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளது என்று முழு ஒத்திகையானது நடைபெற்றது.

Recent News

சினிமா நடிகரின் கட்சியை முடித்து விட்ட தொகுதி கோவை தெற்கு தொகுதி- வானதி சீனிவாசன் பெருமிதம்…

கோவை: பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி தெற்கு தொகுதி என்று வானதி சீனிவாசன் பெருமிதம் கொண்டார். பாஜக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் கோவை புளியகுளம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...

Video

Join WhatsApp