கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு தண்டனை தீர்ப்பு வழங்கியது கோவை நீதிமன்றம்…

கோவை: கஞ்சா கடத்தல் வழக்கு இரண்டு பேருக்கு ஐந்தாண்டு சிறை மற்றும் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கஞ்சா கடத்தல் வழக்கில் இரண்டு பேருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

கோவை ரயில் நிலையத்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வந்த ஒரு ரயிலில் இருந்து இரண்டு பேர் பைகளுடன் இறங்கினார்கள். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப் , பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் காவல் துறையினர் அவர்கள் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். இதில் இரண்டு பேரிடமும் தலா 5 கிலோ விதம் மொத்தம் 10 கிலோ கஞ்சா இருந்தது. அவர்கள் ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது கோவையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்திய போது. பிடிபட்டவர்கள் கோவை சிட்கோ பகுதியை சேர்ந்த ரவிக்குமார், பெலிக்ஸ் என்றும் தெரியவந்தது. இதை தொடர்ந்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி ராஜலிங்கம் குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமார், பெலிக்ஸ் ஆகியோருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Recent News

கோவையில் திடீர் பள்ளம்- சிக்கிய லாரி…

கோவை: கோவையில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியது. கோவை மாநகர் மணியகாரம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சில தினங்கள் ஆகிறது. அதற்காக போடப்பட்ட புதிய சாலையில் லாரி ஒன்று...

Video

Join WhatsApp