ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியது தங்கம் விலை!

கோவை: தங்கம் விலை பவுனுக்கு ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி புதிய வரலாறு படைத்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை தினந்தோறும் புதிய வரலாறு படைத்து வருகிறது.

இதனிடையே இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 விலை உயர்ந்தது.

அதன்படி, இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.12,460க்கும், ஒரு பவுன் ரூ.99,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே தற்போது தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் பவுனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.12,515க்கும், பவுன் ரூ.1,00,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு பவுன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுவது இதுவே முதன்முறை.

இதேபோல் வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று வெள்ளி விலை ஒரு கிராமிற்கு ரூ.5 அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ. 215க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,15,000க்கும் விற்பனையாகி வருகிறது.

இதனால் நகைப் பிரியர்கள், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp