கம்மி விலையில் வண்டி வாங்கலாம்; கோவை போலீஸ் ஏலம் அறிவிப்பு!

கோவை: கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட உள்ளதாகவும், விருப்பமுள்ளோர் ஏலம் எடுக்க வரலாம் என்றும் மாநகர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் – 62, மூன்று சக்கர வாகனங்கள் – 2, நான்கு சக்கர வாகனங்கள் – 9 என மொத்தம் 73 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.

இவற்றை டிசம்பர் 24ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விட போவதாக போதைப்பொருள் அழிப்பு குழுவினரால் (Drug Disposal Committee) முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட வாகனங்களை பார்வையிட விருப்பம் உள்ளவர்கள் 22ம் தேதி தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்திற்கு வரலாம்.

மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் காப்புத் தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.3,000, நான்கு வாகனங்களுக்கு ரூ.5,000 என

கோவை மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு போலீசார் அறிவித்துள்ளனர்.

Recent News

குடும்ப தலைவிகளுக்கு 2000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து- முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் EPS…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட...

Video

Join WhatsApp