ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் ஸ்ரீ ராம் சந்த்ரா மெஷின் அமைப்பானது, தியானம், யோகா மற்றும் நன்னெறி அடிப்படையிலான வாழ்க்கை முறை மூலம் மனிதத் தன்மை மாற்றத்திற்காக உலக அளவில் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு சார்பில் நாளை உலகளாவிய தியான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த தியான நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம் என்று ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் ஸ்ரீ ராம் சந்த்ரா மெஷின் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:-
எங்களது அமைப்பு தாஜியால் 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் இலவச தியான பயிற்சிகளை வழங்கி வருகிறது. எங்கள் தலைமையகமான கான்ஹா சாந்தி வனம் உலகின் மிகப்பெரிய தியான மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.
மேலும் பயிற்சி தியானம் மற்றும் சமூக திட்டங்களுக்கான மையமாகவும் செயல்பட்டு வருகிறது. தியானம், தெளிவு, இரக்க உணர்வு மற்றும் உணர்ச்சி ரீதியான சமநிலையை ஆதரிக்கிறது.
லட்சக்கணக்கானோர் ஒன்றாக இணைந்து தியானம் செய்யும்போது அதன் பொதுவான நோக்கம் அனைவருக்குமான அனுபவத்தை வழங்குகிறது. இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த உலகளாவிய ஆன்லைன் தியான அமர்வு நாளை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த உலக தியான நிகழ்வில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம். பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க தங்களது வருகையை முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
தியான நிகழ்வில் பங்கேற்க கீழே உள்ள லிங்க் மூலம் முன்பதிவு செய்யலாம்…

