கோவை: கோவையில் ஒரு நிமிடத்தில் சேலை அணிந்து அசத்திய பெண்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர்.
இந்திய பெண்களின் உடை கலாச்சாரத்தை கூறும் விதமாக கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு நிமிடத்தில் சேலை கட்டி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இந்தியாவின் பாரம்பரிய உடையான சேலை அணிவது, பெண்களின் மரியாதை, அழகு, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் பிரதிபலிப்பாக திகழ்வது என்பதை கூறும் வகையில், ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் சேலை அணியும் உலக சாதனை நிகழ்வு கோவையில் நடைபெற்றது.
ஜெய்’ஸ் ப்ரைடல் ஸ்டுடியோ மற்றம் அகாடமி சார்பில் நடைபெற்ற இதில் கல்லூரி மாணவிகள்,இளம் வயது பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஒரு நிமிடத்தில் அனைவரும் இணைந்து மிக வேகமாக நேர்த்தியாக அழகாக புடவை கட்டி அசத்தியதோடு நடனம் ஆடி அசத்தினர்.
பல்வேறு வண்ணங்களில் ஆன புடவைகளை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ஒரு நிமிட அவகாசத்தில் அணிந்த இந்நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இது குறித்து புடவைகள் அணிவதற்கான பயிற்சி வழங்கி வரும் மாஸ்டர் ஜெயந்தி கூறுகையில்,தற்போது இந்திய பெண்களிடையே புடவை அணியும் கலாச்சாரம் குறைந்து வருவதாக தெரிவித்த அவர்,ஆனால் வெளிநாடுகளில் உள்ள பெண்கள் புடவையை விரும்பி அணிந்து வருவதாக கூறினார்.

