கோவையில் நடைபெற்ற வாள்வீச்சு போட்டி…

கோவை: கோவையில் நடைபெற்ற வாள்வீச்சு போட்டியில் வீரர் வீராங்கனைகள் லாவகமாக கத்தியை சுழற்றி மதிப்பெண் பெற்றனர்.

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ,
மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக வாள் வீச்சு போட்டிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..

இந்நிலையில் கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் ஆகியோர் இணைந்து மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டி சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது..

Advertisement

20 வயதிற்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள போட்டியில் ,ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன..

சென்னை,திருச்சி,மதுரை,,
திருவண்ணாமலை, கோவை,ஈரோடு என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

ஃபாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ்,நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட மாணவியர்கள் வாளை லாவகமாக சுழற்றி அதிக புள்ளிகள் பெறுவதில் கவனம் செலுத்தினர்..

இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் ஜனவரி மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்ப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.