கைகள் மற்றும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு கோவையில் செவிலியர்கள் போராட்டம்…

கோவை: கண்கள் மற்றும் கைகளை கட்டி கொண்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் செவிலியர்கள் இன்று கைகள் மற்றும் கண்ணை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட செவிலியர்கள் கைது செய்யபட்டது பெரும் கண்டனங்களுக்கும் உள்ளானதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எம்.ஆர்.பி செவிலியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி கோவையிலும் எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 6 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாள் தோறும் இரவு பனியையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில செவிலியர்கள் அவர்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 6 வது நாளான இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள செவிலியர்கள் சிலர் கைகளை கருப்பு துணியால் கட்டி கொண்டும், சிலர் கண்ணை கருப்பு துணியால் கட்டி கொண்டும் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொடர்ந்து இந்த காத்திருப்பு போராட்டத்தை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp