கோவை: பள்ளி வாகனத்தை சுத்தியலை கொண்டு தட்டி பார்த்து ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்.
கோவை, அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆய்வு செய்தார். வாகனங்களில் உள்ள வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதா இருக்கைகள் அனைத்தும் முறையாக உள்ளதா என்பதை குறித்த ஆய்வு செய்தார். மேலும் சுத்தியலை கொண்டு அவசர கால உதவி கதவை தட்டி பார்த்து சோதனை மேற்கொண்டார். மேலும் வாகன ஓட்டுனர்கள் ஆகியோருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர்,கோவை மாவட்டத்தில் உள்ள 4 ஆர்.டி.ஓ பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தியதாகவும், 1,644 வாகனங்கள் பிட்னஸ் சர்டிபிகேட் 70 % உள்ளதா ? என ஆய்வு செய்து உள்ள நிலையில் 2 வண்டிகளுக்கு ஃபிட்னஸ் இல்லாததால் கேன்சல் செய்து உள்ளதாகவும், பள்ளி வாகனங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா ? என ஆய்வு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் ஓட்டுநர்கள் உடல் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி உள்ளதாகவும், அதேபோல அரசு பேருந்துகள் மற்றும் மாநகராட்சி வாகனங்களையும் கண்காணிக்க அறிவுரை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

