கோவை: கோவை மாநகராட்சி 2025- ன் இறுதி நாள் மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் தர்ரணாவில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
இதில் 150 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் மாமன்ற கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன் ரமேஷ் ஆகியோர் அங்கு திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கைகளில் சாலைகளை சீரமைக்காததை கண்டித்து எழுதிய வாசகங்கள் உடைய பேனர்க ளை கொண்டு வந்து தி.மு.க விற்கு எதிராககோஷம் எழுப்பினர்.
இது குறித்து அ.தி.மு.க
கவுன்சிலர் பிரபாகரன் கூறும்போது, கோவை மாநகராட்சியில் அவசர கோலத்தில் அவசரக் கூட்டம் நடத்துகிறார்கள்., ஒரு அவசர கூட்டத்தில் ஒரு முக்கியமான ஒரு தீர்மானம் கொண்டு வந்து விவாதிப்பார்கள், ஆனால் நேற்று நடைபெற வேண்டிய சாதாரண கூட்டம் இன்று அவசரக் கூட்டமாக மாற்றி உள்ளனர்.
அதில் 105 தீர்மானங்கள் கொண்டு வந்து உள்ளனர். தி.மு.க உறுப்பினர்கள் கூட அதை திரும்பி பார்த்து இருக்க மாட்டார்கள் ,
வெள்ளலூர் குப்பை கிடங்கு வெள்ளலூரில் தொடங்கி செட்டிபாளையம், போத்தனூர், ஆத்துப்பாலம், குனியமுத்தூர் கோவை புதூர் வரை மழைக் காலத்தில் துர்நாற்றம் வீசும்.
ஆனால் தற்பொழுது சாதாரணமாக காற்று வீசினால் கூட அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது என்றார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரபட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வேண்டுமென்றே முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டதாகவும் கூறினார்.

