கோவை அருகே பலா மரத்தை சுற்றி வந்த யானை…

கோவை: கோவை அருகே பலா மரத்தில் இருந்த பழங்களை ருசி கண்ட யானையின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்ளுக்குள் உணவுப் பொருட்களை தேடி காட்டு யானைகள் புகுகின்றன. அவ்வாறு ஊருக்குள் புகும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.

அதனை விரட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறுகிறது.

இந்நிலையில் பெரிய தடாகம் அருகே சுஜாதா கார்டனில் பகுதியில் உள்ள சுரேஸ்பாபு என்பவர் வீட்டின் பின்புறத்தில் இருந்த பலா மரத்தில் இருந்த பழங்களை பறித்து தின்றுள்ளது. அந்த சத்தம் கேட்டு சென்ற சுரேஷ்பாபு வீட்டின் மாடிக்கு சென்று டார்ச் லைட் அடித்து பார்த்த போது யானை நின்று கொண்டு இருந்துள்ளது.

அதனை தனது செல்போனை வீடியோ பதிவு செய்தார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரலாகி வருகிறது.

Recent News

Video

Join WhatsApp