கோவை: கோவையில் இடைநிலை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
இடைநிலை ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பு செய்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மேலும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த நிலையில், இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திமுக அரசு கொடுத்த 311 வது வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு, சமஊதியம் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று கோவை மணிக்கூண்டு பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை பணி புறக்கணிப்பு செய்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவரை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

