கோவை: இந்த தேர்தலில் சீமான் எடப்பாடி பழனிச்சாமியை முந்துவார் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவை செல்வபுரம் பகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய புகழேந்தி, சின்னம்மா என்ற சசிகலாவால் அதிமுகவிற்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது. ஓபிஎஸ் பாஜக அடிமையாக மாறிவிட்டார் அதிமுகவை பாஜகவிற்கு அடகு வைத்து விட்டவர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார். இனிமேல் எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரை சொல்லி ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
சசிகலா அதிமுகவை சேர்க்கிறேன் என கூறி ஏமாற்றி வருவதாகவும் பாஜகவால் ஒரு வாக்கை கூட வாங்க முடியாது என்றும் அதிமுக காரர்கள் பாஜகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள் என்றார். பாஜக அந்த நான்கு அடிமைகளை வைத்து கொள்ளட்டும் என சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் பெயர் சொல்ல விரும்பாத நண்பர் என டிடிவி தினகரனை பெயர் குறிப்பிடாமல் குறிபிட்டார்.
விஜய் ஒரு கட்சி ஆரம்பத்ததால் திரைப்படம் வெளியிட முடியாமல் பாடுபடுகிறது என்றும் ஜனநாயகன் படம் வெளியிட ஜனநாயக நாட்டில் பிரச்சனை ஏற்படுவதாக கூறிய அவர் விஜய் ஜெயலலிதாவை போன்று மத்திய அரசையும் மாநில அரசையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டது தான் இந்த நிலைக்கு காரணம் என்று கூறினார். ஜனநாயகன் ரிலீஸ் ஆகவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் அவருக்கு வாக்குகள் தான் அதிகமாகும் என்றார்.
நாங்கள் பழனிச்சாமி, பாஜகவை காலி செய்ய வேண்டும் என முடிவு எடுத்திருக்கிறோம் என்றும் பாஜக நாடகம், எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என்றார். இந்த ஒன்பது ஆண்டுகளில் ஏதாவது ஒரு தலைவர் சேர்ந்துள்ளார்களா? வெளியில் தான் செல்கிறார்கள் என கூறினார். விஜய் பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றியும் அதிமுக இப்படி ஆகிவிட்டது பேசுவதால் தான் நான் விஜயை ஆதரித்து சில இடங்களில் பேசுகிறேன் என்றார். அதிமுக ஓட்டு திசை திருப்பப்ப்ட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.
பாமகவில் மகன் தந்தைதை தூக்கி எறியும் காட்சி, மகனை தந்தை தூக்கி எறியும் காட்சிகளை பார்க்கிறோம், தேமுதிக மாநாட்டில் ஆர்ப்பறிக்கும் கூட்டத்தை பார்க்க முடிந்தது என கூறிய அவர் பழனிச்சாமி ஆட்டம் முடியும் காலம் வந்துவிட்டது, எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை நாடி சென்றால் ஜெயிலுக்கு தான் போக வேண்டும் அவர்களே அந்த வேலையை செய்வார்கள் என்றார்.
முதல்வரை நாங்கள் பெரிதும் மதிப்பதாக கூறிய அவர் அவர் முதல்வராக பதவி ஏற்கும் போது அதிமுக ஊழல் கமிஷன் அமைப்போம் தண்டனை பெற்று தருவோம் என கூறியதாகவும் அதை செய்தாரா? எஸ்.பி.வேலுமணி வீட்டில் எத்தனை ரெய்டு நடந்தது கைது செய்தார்களா? என கேள்வி எழுபினார். இதனால் ஏன் கோடநாடு விவகாரத்தில் எல்லாம் பழனிச்சாமியை ஏன் விசாரிக்கவில்லை என திமுக தொண்டர்களே பேசி வருவதாக கூறினார்.
மேலும் 4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது என முதல்வர் அமைச்சரை பார்த்து EPS சொல்கிறார் அதற்கு ஏன் முதல்வர் பதில் அளிக்கவில்லை என்ற அவர் இது போன்ற எதிர்கட்சி தலைவர் தான் வேண்டுமென நினைக்கிறீர்களா? என முதல்வருக்கு கேள்வி எழுப்பினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியால் தான் அண்ணாமலை அவரது பதவி பறி போனதாகவும் தெரிவித்தார்.
ஜனநாயகன் படம் பிரச்சனை முடிந்ததும் யாருக்கு ஆதரவு வருவது என முடிவெடுப்போம் என்றும் வடக்கில் இருந்து வந்த சங்கிகளை எங்களால் ஏற்று கொள்ள முடியாது என்றும் அண்ணா, காமராஜரை ஆகியோர்களை ஏற்று கொண்டவர்களை தான் நாங்கள் ஏற்போம் என்றார்.
பாஜக பின்னால் அதிமுக தொண்டர்கள் வரமாட்டார்கள் என்றும் அதிமுக தொண்டர்கள் என்ன செய்ய வேண்டுமென நாங்கள் இனி கூறுவோம் என்றார்.
பின்னர் செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்த அவர், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றார். எடப்பாடி பழனிச்சாமி பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றார். பாஜக அதிக இடங்களை கேட்பது போல் தெரிகிறது என்றும் வருமான வரித்துறை ஃபைல் என்றால் EPS பாஜக கேட்கும் இடத்தை கொடுத்து விடுவார் என்றார்.
யாரோ ஒரு பெண் வந்து ஜெயலலிதா தான் எனது அம்மா என கூறுகிறார், அவர் இருக்கும் போது அப்படி கூற முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர் ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவினர் இது போன்று குதித்து கொண்டிருக்கமாட்டார்கள் அவர்கள் இல்லாததால் தான் அனைத்தும் தலைகீழாக மாறியது என்றார்.
உள்ளாட்சி தேர்தலையே அதிமுக நடத்தாமல் திமுக ஸ்டாலின் வந்து தான் நடத்தியதாக தெரிவித்தார். ஊழல் குற்றசாட்டுகளில் ஊறி போய் இருக்கிறார்கள் அதிமுக ஊழலை பற்றி கவர்னரிடம் மனு அளித்தவர் முதல்வர் என்று குறிப்பிட்டார். பெருமாநல்லூரில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் சென்ற காரில் ஒரு பெண் விபத்தில் உயிரிழந்தால் என்று கதையே மாறியதாகவும் அன்று பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்ததால் அவர் தப்பித்தார், அந்த பெண் கொலை செய்யப்பட்டவர் என கூறியது அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தான் என்றார். ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் அதை பற்றி வெளியில் கொண்டு வருவோம் என முதல்வர் கூறினாரே அது என்ன ஆனது என்றார்.
ஜனநாயகத்தில் ஜனநாயகம் இல்லை, என்றும் ஜனநாயகன் படத்தை மரியாதையுடன் ரிலீஸ் செய்யுங்கள், இல்லையென்றால் அவருக்கு ஆதரவு தான் அதிகரிக்கும் என்றார். உலகத்திலேயே தமிழுக்காக போராடியது ஒரே நாடு தமிழ்நாடு தான், பராசக்தி படத்தில் இந்திராகாந்தியை தவறாக சித்தரித்துள்ளார்கள் (படத்தின் பெயரை குறிப்பிடவில்லை).
பாஜக பின்னால் EPS, OPS , சசிகலா, பெயர் சொல்ல முடியாத நண்பர் இருக்கிறார்கள் என்று விமர்சித்தார். தேர்தல் நேரத்தில் நாங்கள் ஒரு கட்சியை ஆதரிக்க தான் போகிறோம் என்றார். தலைவரின்(எம்ஜிஆர்) பைலாவை தொட்டான் அவன் கெட்டான் என்று கூறிய அவர் அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர் ஜெயலலிதா என்பதை தூக்கி வீசிய கொடியவன் எடப்பாடி பழனிச்சாமி என குறிபிட்டார்.
இந்த தேர்தலில் பழனிசாமி எதிர்கட்சி தலைவர் ஆக முடியாது ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என்றும் செங்கோட்டையன் ஜெயிக்க தான் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியால் சேலத்தில் கூட பழனிச்சாமி ஜெயிக்க முடியாது என்றார்.
இந்த முறை போட்டி திமுக- தவெக விற்கு தான் என கூறினார். சீமான் மூன்றாவது இடத்திற்கு வருவார், எடபாடி நான்காவது இடத்திற்கு போவார் என்றார்.
எங்களால் அதிமுகவை ஒருங்கிணைக்க முடியவில்லை என்றும் அதிமுக தலைவர்களை ஒருங்கிணைந்து செல்ல முடியாது, எனவே தொண்டர்கள் ஒருங்கிணைத்து செல்ல போகிறோம் என்றார்.அதிமுக சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தற்கொலை செய்து கொள்வது போல அதிமுக அழிவை நோக்கி செல்கிறது என்றார்.
பொள்ளாச்சி பாலிய்ல் வழக்கு போன்று இங்கு ஏதாவது வராமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி 2026 உடன் க்லோஸ் ஆவார் 2026 தேர்தல் முடிவு வரும் போது தோல்விக்கு யார் காரணமோ அவர்களை அதிமுக தொண்டர்கள் துரத்தி துரத்தி அடிப்பார்கள் என்றார்.
பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்காததால் தான் நாங்கள் முதல்வரை எதிர்ப்பதாக தெரிவித்தார். அதிமுக தலைவர்களை இனி ஒருங்கிணைக்க முடியாது எனவே தொண்டர்களை ஒருங்கிணைக்க போகிறோம் என தெரிவித்தார். தேர்தலில் நிற்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன் இருப்பவர்களே தயாராக இல்லை என்றார்.
நான்கு பேரும் பாஜக பிடியில் இருக்கிறார்கள் என்றும் ஒருவரும் பாஜகவில் இருந்து வெளியில் வர மாட்டார்கள் எனவே அதிமுக படுதோல்வி அடையும் என தெரிவித்தார். கோடநாடு வழக்கில் ஏன் முதல்வர் விசாரணை நடத்த மறுக்கிறார்? என கேள்வி எழுப்பிய அவர் எடப்பாடி பழனிசாமி ஜெயிலில் இருக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

