கோவை: கோவை விளாங்குறிச்சி சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து குழிக்குள் கார் சிக்கியது.
கோவையில் மாநகராட்சி சார்பில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இது போன்ற திட்டங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகள் அவசர கதியில் சீரமைக்கப்படுவதால் சாலை தரமற்றதாகவும், அடிக்கடி கனரக வாகனங்கள் சிக்கி கொள்வதாகவும், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று விளாங்குறிச்சி சாலையில் சேரன்மாநகர் நோக்கி சென்ற கார் ஒன்று சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து குழிக்குள் சிக்கி கொண்டது.
பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் உதவியுடன் கார் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

