பொங்கலுக்கு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு- கமிஷனர் பேட்டி…

கோவை: பொங்கலுக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கோவை மாநகர் காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல் ஆணையாளர் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பேருந்து நிலையங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது என்றும் வெளியூர் செல்ல மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் பிக்பாக்கெட் தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது எனவும் புதன்,வியாழன்,வார சந்தை போக்குவரத்து சரி செய்ய ஏற்பாடுகள் செய்து உள்ளோம் என்றும் 10 முக்கிய கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பதற்றமான 6 இடங்களை தேர்வு செய்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார். சாலை ஓரங்களில் மது அருந்துவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

மேலும் சைபர் குற்றங்களை எங்கிருந்து நடக்கும் நிலை உள்ளது என்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம் வெளிநாடு,வெளி மாநிலம் இருந்து தவறு செய்வார்கள் சைபர் குற்ற வழக்குகளில் அதிகம் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார். RTO காசோலை ஒன்று வந்துள்ளது என முதியவர் வங்கி கணக்கில் இருந்த 17 லட்சம் கொள்ளை அடித்து உள்ளனர் அவர்களை பிடிக்க தனிப்படை வெளி மாநிலம் புறப்பட்டது.ஒரு வழக்கில் 10 பேரை கைது செய்து தமிழ்நாடு அழைத்து வருவது இதுவே முதல் முறையாகும் என்றும் அதற்கு குஜராத் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்.

இது மாதிரியான சைபர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது 350 கிரெடிட் கார்டுகள், பணம்,செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் கடந்த ஆண்டில் 400 மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளோம் வரும் ஆண்டில் அதிகப்படியான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தனிப்படை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம் மிரட்டல் விடுபவர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர் தான் என தகவல் வெளியாகியுள்ளது விரைவில் பிடித்து விடுவோம்.காவல்துறைக்கு பொங்கல்,தீபாவளி கிடையாது அனைவரும் பணியில் உள்ளனர் என தெரிவித்தார்.

ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் எனவும் முன்விரோதம் பகை தொடரும் கொலை சம்பவங்கள் குறித்து கண்காணித்து வருவதாகவும் போதை தடுப்பு தனி பிரிவு உருவாக்க உள்ளோம் போதை நடமாட்டத்தை கண்டறிய வேண்டும் என்றார். கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை கடந்த 8 தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளோம் வழக்கு தேவையான ஆதாரங்கள் இணைக்கப்பட்டது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp