கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பவன் குமார் தலைமையில் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அனைவருக்கும் பொங்கல் விழா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து உறியடித்த மாவட்ட ஆட்சியர் அனைவருடனும் இணைந்து ஜமாப் இசைக்கு உற்சாகமாக நடனம் ஆடினார். அதனைத் தொடர்ந்து கயிறுக்கும் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.

