மதுக்கரையில் ஆம்புலன்ஸ்-கார் மோதி கோர விபத்து! – வீடியோ

கோவை: மதுக்கரையில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர். 

இன்று காலை மதுக்கரை அருகே போடிநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே கோவையிலிருந்து கேரளாவிற்கு ஒரு கார் சென்றது.

காரில் 2  பேர் பயணம் செய்தனர். பெட்ரோல் பங்க் அருகில் 2 வாகனங்களும் திடீரென்று மோதிக்கொண்டன.

இதில் கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 
ஆம்புலன்ஸ் வேன் ரோட்டில் இருந்து அருகில் உள்ள சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்து நடந்ததை பார்த்த பொதுமக்கள் பேட்ரோல் போலீஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisement

போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்து போராடியவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?- விளக்கம் அளித்த தமிழ்நாடு அமைச்சர்…

கோவை: பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்று அமைச்சர் கோவி செழியன் விளக்கம் அளித்துள்ளார். கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில திமுக தேர்தல்...

Video

ஆஃபர் என்ற பெயரில் பழைய அதிரசம்; ஆனந்தாஸ் உணவகத்தை விளாசிய வாடிக்கையாளர்! – வீடியோ

கோவையில் 50% சலுகை பெயரில் பழைய அதிரசம் விற்றதாக ஆனந்தாஸ் உணவகத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Join WhatsApp