கோவையின் டாப் 5 சினிமா தியேட்டர்கள்

எந்த நேரமும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் நமது வாழ்க்கையில் சிறிது பொழுதுபோக்கும் அவசியம். என்னதான் OTT தளங்கள் இருந்தாலும், தியேட்டருக்கு போய் சினிமா பார்க்கும் சுகம் சொர்க்கம் தான். அதுவும் நமக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் படங்களை முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க வேண்டும் என்பது எப்போதும் தீராத ஆசையாகும்.

சினிமா மீதான ஈர்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தியேட்டர்களிலும் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. எபிக் (EPIQ), ஐமேஸ் என பலவகையான திரையரங்குகள் உள்ளன.

அப்படி, கோவையில் பிரபலமான டாப் 5 தியேட்டர்களை தற்போது காணலாம்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே தியேட்டரில் ‘எபிக்’ (EPIQ) தொழில் நுட்பத்துடன் இயங்கும் திரை வசதியுடன் இந்த திரையரங்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல், இங்கு லேசர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஐ-மேக்ஸ் திரையரங்கு அங்கு உள்ளது. மேலும் இங்கு மொத்தம் 9 திரைகள் உள்ளன. RGB புரோஜெக்ட்டர், Dolby Atmos ஸ்பீக்கருடன் இந்த EPIQ திரையரங்கம் அமைந்துள்ளது.

Broadway cinemas screen size, coimbatore theaters
Broadway cinemas

கோவை ரேஸ் கோர்ஸில் அமைந்திருக்கு கேஜி தியேட்டர், கோவையில் இருக்கும் சிறப்பான தியேட்டர்களில் இதுவும் ஒன்று. தியேட்டரில் சவுண்ட் சர்வீசும் அற்புதமாக இருக்கும். இங்கு மொத்தம் 3 திரைகள் உள்ளன.

KG Cinemas Coimbatore
KG Cinemas Coimbatore

கிருஷ்ணசாமி சாலையில் அமைந்துள்ள ப்ரூக் பீல்ட்ஸ் மாலில் இந்த தியேட்டர் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 6 திரைகள் உள்ளன. இங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் சற்று விலை உயர்ந்ததாகவே இருக்கும். ஆனால், தியேட்டரின் பராமரிப்பு சூப்பராக ஈருக்கும். படம் பார்க்க சென்றால், ஒருநாள் முழுவதும் அந்த மாலில் கழித்து வரலாம்.

அவினாசி சாலையில் அமைந்துள்ள ரிபப்ளிக் மாலில் இந்த தியேட்டர் அமைந்துள்ளது. இதுவும் ப்ரூக் பீல்ட்ஸை போன்று தான். கோவை மக்களுக்கு பிடித்த மற்றும் பொழுது போக்கு இடமாக இருக்கும்.

சத்தி சாலையில் உள்ள ப்ரோஷோன் மாலில் இந்த தியேட்டர் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 09 திரைகள் உள்ளன. டிஜிட்டல் டிக்கெட்டுக்கள் பெறும் முறை என படம் பார்க்க வருபவர்களுக்கு கூடுதல் வசதிகள் உள்ளன. இங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் சற்று விலை உயர்ந்தது தான்.

Inox theater, screen size, Prozone mall, inox coimbatore,
Inox theater Prozone mall

2 COMMENTS

  1. It all spots are for lovers only….I won’t prefer go to these areas…and to make actors as milloners by wasting my time

  2. இதில் ஒண்டிபுதூர்ல் இருக்கும் Miraj cinemas விட்டுட்டீங்க…. அதுவும் எல்லாமே செமையா இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp