Fun Republic Mall-ல் அசத்தலாக திறமையை வெளிப்படுத்திய கோவை பெண்கள்! – VIDEO

கோவை: மகளிர் தினத்தையொட்டி Fun Republic Mall-ல் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு கோவை பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Advertisement

உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள Fun Republic Mall நிர்வாகம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Coimbatore women talent show

அதன்படி, மார்ச் 15ம் தேதி “Let’s Celebrate Her” என்ற சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், பெண்களுக்கான மெஹந்தி போட்டி, ரங்கோலி போட்டி, மேக்-ஓவர் போட்டி மற்றும் Fashion Walk உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

வெவ்வேறு போட்டிகளிலும் கோவை மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Advertisement
Coimbatore women talent show

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு Fun Republic Mall பொது மேலாளர் பாலசுப்ரமணியம் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இதுகுறித்து News Clouds Coimbatore-இடம் பாலசுப்ரமணியம் கூறுகையில், இரண்டாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிக பெண்கள் கலந்து கொண்டனர்.

fun mall coimbatore balasubramaniyan

ஒவ்வொருவரும் தங்களது துறையில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர். மாதந்தோறும் Fun Republic Mall-ல் வெவ்வேறு விதமான போட்டிகளை நடத்தி வருகிறோம்” என்றார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ரயில்வே துறையில் ஆட்குறைப்பு- DYFI கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவை: இந்திய ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அண்மையில் ரயில்வே வாரியம் 14.8 லட்சம் பணியிடங்களில் இரண்டு சதவிகிதத்தை நடப்பு ஆண்டில் குறைக்க...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...