கோவை: கோவையில் கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு நிரந்திரமான மாதாந்திர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்று தருவதை குறிக்கோளாக கொண்டு 2012 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற திறன் பயிற்சி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய–மாநில அரசு நிதி பங்களிப்பு
ஒன்றிய அரசின் 60% பங்களிப்புடனும் தமிழக அரசின் 40% பங்களிப்புடனும் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊள்ளாட்சித்துறையின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் 2.0 புதிய வடிவம் இவ்வாண்டு (2025-26 ஆம் ஆண்டில்) அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் ஊரக பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு 20க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் 40 தொழில் பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிக்கு பின் உரிய வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. பயிற்சி வழங்குவதற்காக 38 பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்க உள்ளனர்.
(Soft Skills) பயிற்சிகளும் வழங்கல்
இத்திட்டத்தில் பயிற்சியுடன் இளைஞர்கள் தங்களது அடிப்படை ஆங்கில அறிவு, ஆங்கிலத்தில் உரையாடும் அறிவு, கணினி மற்றும் மின்னஞ்சல்கள் பயன்பாடு, ஆளுமை திறன் குழுவாக இணைந்து செயல்படுதல் போன்ற பல்வேறு மென்திறன் பயிற்சிகளும் வழங்கப்படுதல் பயிற்சிக்கு பின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவது எளிதாகிறது.
குறிப்பாக, ட்ரோன் ஆப்ரேட்டர்,மொபைல் போன் டெக்னீசியன், CNC இயக்கம்,செவிலியர் பயிற்சி,ஜீனியர் சாஃப்ட்வேர் டெக்னாலஜி, AI அனலிஸ்ட், வெப் டெக்னாலஜி, வேர் ஹவுஸ் மேற்பார்வையானர், ICB ஆப்ரேட்டர், சோலார் டிவி அமைத்தல்,வெல்டிங், அட்வான்ஸ் பேட்டன் மேக்கர்,மெடிக்கல் டெக்னீசியன் போன்ற அதிக வேலைவாய்ப்பு உள்ள பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலம் மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும்.
அரசு அங்கீகார பயிற்சி சான்றிதழ்கள்
பயிற்சி காலத்தில் சீருடை, உணவு, தங்கும் இடம் வசதி, பாட புத்தகங்கள், ஆகிய அனைத்தும் எவ்வித கட்டணமும் இன்றி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் பயிற்சி முடித்த இளைஞர்களில் குறைந்தது 50% நபர்களுக்கு கட்டாய பணியமார்வும்20% இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான உதவியும் வழங்கப்படும்பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவுடன் மாதம் ரூ.1270 வீதம் ஆறு மாதங்களுக்கு ஊக்கத்தொகையும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 25%, மலைவாழ் பிரிவினருக்கு 2%, சிறுபான்மையினருக்கு 15%மற்றும் பெண்களுக்கு 39% (ஒட்டுமொத்தமாக) என பயிற்சியில் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தொடர்பு கொள்ளும் வழிமுறைகள்
விருப்பமுள்ள இளைஞர்கள் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலகினை அணுகியோ அல்லது 155330 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டோ பயிற்சி குறித்த தகவல்களை பெறலாம்.
தேவைப்படுவோர்க்கு பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையும் வளமாக்கிடுங்கள் வாசகர்களே…!

