PF salary deduction rules: தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பில் இணைவதற்கான அடிப்படை ஊதியத்தின் உச்சவரம்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அதிக ஊதியம் வாங்குவோரும் இனி வருங்கால வைப்பு நிதி (Provident Fund) எனப்படும் PF திட்டத்தால் பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Table of Contents
யாருக்கெல்லாம் Provident Fund
இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஓய்வுக்கால பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக வருங்கால வைப்பு நிதி (Provident Fund – PF) திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டத்தின் படி அடிப்படைச் சம்பளம் (Basic Pay) ரூ.15,000 மற்றும் அதற்கு குறைவாக பெறுவோருக்கு கட்டாயமாக PF தொகை பிடிக்கப்படுகிறது.
எவ்வளவு தொகை பிடித்தம்
ஊழியரின் ரூ.15,000 அடிப்படை ஊதியம் மற்றும் DA-ல் இருந்து 12 சதவீதம் PF தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோன்று, சம்பந்தப்பட்ட நிறுவனமும் ஊழியரின் பெயரில் 12 சதவீதத்தை அந்த ஊழியரின் PF கணக்கில் செலுத்துகிறது.
நிறுவனம் செலுத்தும் 12 சதவீதத்தில் இருந்து 8.33 சதவீதம் பணம் ஊழியரின் ஓய்வூதியத்திற்கு Employees’ Pension Scheme (EPS) வழியாக செல்கிறது. மீதமுள்ள பணம் PF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் PF பிடிப்பதில்லை
அடிப்படை சம்பளம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு PF தொகை பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், சம்பந்தப்பட்ட ஊழியரும் அந்த தனியார் நிறுவனமும் சம்மதித்தால் PF தொகை பிடிக்கலாம்.
ஆனால், தொழிலாளர் நிதியில் இருந்து பிடிக்கும் அதே அளவு பணத்தை நிறுவனத்தாரும் வழங்க வேண்டியிருப்பதால், பல நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு உடன்படுவதில்லை.
PF salary deduction rules
இதனிடையே, கட்டாயமாக PF தொகை பிடிக்க வேண்டிய ஊதிய உச்சவரம்பு தற்போது ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, அடிப்படை சம்பளமாக ரூ.25,000 பெறும் ஊழியர்களுக்கும் இனி தனியார் நிறுவனங்கள் கட்டாயமாக PF தொகை பிடித்தம் செய்து, தாங்களும் அதே அளவு தொகையை வழங்க வேண்டும். இந்த பணம் அவர்களது Provident Fund கணக்கில் வரவு வைக்கப்படும்.
சாதகமும்-பாதகமும்
வாங்கும் ஊதியத்தில் இனி PF தொகை பிடிக்கப்படும். இதனால் மாதாந்திர பட்ஜெட்டில் செலவுகளை திட்டமிடுவோருக்கு ஆரம்பத்தில் சற்று சிக்கல் ஏற்படலாம்.

ஆனால், இதுவரை இல்லாமல் இனி உங்கள் ஊதியத்தில் இருந்து பணம் பிடிக்கப்படுவதால், அது உங்கள் ஓய்வூதியத்திற்கு செல்லும். இதன் மூலம் சேமிப்பும் அதிகரிக்கும்.
மேலும், சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையும் புதிய உச்சவரம்பின் அடிப்படையில் உயர்த்தப்படும்.
இந்த திட்டத்தினால் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இந்த திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகவே பார்க்கப்படுகிறது.
Click image to know gold rate


