Header Top Ad
Header Top Ad

கோவை வாசகர்களே..! வீடு, நிலம் வாங்கவோ, விற்கவோ போகிறீர்களா? இந்த செய்தி உங்களுக்கே!

கோவை: கோவையில் வீடு மற்றும் நிலத்தை அளவீடு செய்ய கொண்டுவரப்பட்ட புதிய ஆன்லைன் தளம்.

வீடு மற்றும் நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது நிலம் அல்லது வீட்டை அளக்க வேண்டுமெனில் அவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு, சம்மந்தப்பட்ட நில அளவையர் வீடு அல்லது நிலத்தை அளந்து கொடுக்க ஒரு தேதி குறித்து கொடுப்பார்.

Advertisement
Lazy Placeholder

அந்த நாளில், நில அளவையர் வந்து நிலத்தை அளந்து, அதன் வரை படத்தை மீண்டும் அலுவலகம் வந்து வாங்கச் செல்வார். இதில், பல்வேறு இடையூறுகளை நில உரிமையாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நில அளவைக்கான புதிய இணைய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Lazy Placeholder

தற்போது கோவையில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும், https://tamilnilam.tn.gov.in/citizen இந்த இணையதளத்தின் வாயிலாக நிலம் அல்லது வீட்டை அளப்பதற்காக விண்ணப்பிக்கலாம்.

Advertisement
Lazy Placeholder

மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, அதற்கான கட்டணம் தெரிவிக்கப்படும், அதனை செலுத்தி விண்ணப்பிக்கலாம். நமது விண்ணப்பம் உறுதியான பின் நிலம் அல்லது வீடு அளவை செய்யப்படும் தேதி, மனுதாரருக்கு மொபைல் போன் வாயிலாக குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படுகிறது.

நில அளவை செய்யப்பட்ட பின்பு அறிக்கை மற்றும் வரைபடத்தை வாங்க மீண்டும் நில அளவையர் அலுவலகம் செல்லத் தேவையில், குறித்த நாளில் நிலவையரால் https://eservices.tn.gov.in/ இந்த இணையதளத்தில் அப்லோட் செய்யப்படும்.

மனுதாரர் குறிப்பிட்ட ஆன்லைன் தனத்துக்கு சென்று அவர்களின் வரைபடத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை பகிர்ந்து நில அளவைப் பணிகளுக்காக அலைந்து கொண்டிருக்கும் மற்ற மக்களுக்கும் உதவிடுங்கள்.

Recent News

Latest Articles