கோவை: கோவையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பம் சரிந்து விழுந்தது. இவ்விபத்தில் அவழியாக காரில் வந்த தம்பதியினர் நூலிழையில் உயிர் தப்பினர்.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சிங்காநல்லூர், ராமநாதபுரம் பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த சூழலில் சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகர் பகுதியில் இருந்த 30 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று மின் வயர்கள் மீது முறிந்து விழுந்தது.
இதனால், அங்கு சேதமடைந்த நிலையில் இருந்த மின் கம்பமும் முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் அவ்வழியாக காரில் வந்த தம்பதியினர் நூலிழையில் உயிர்த்தபினர். காருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இது குறித்த தகவலின் பெயரில் அங்கு வந்த மின் பணியாளர்கள், மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.