Header Top Ad
Header Top Ad

கோவை-திருப்பதி: ரயிலில் சொகுசு பயணம் போகலாம்…

கோவை: கோவை-திருப்பதி செல்லும் பயணிகளுக்கு எல்.எச்.பி ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை முதல் திருப்பதி வரை இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 20 மார்ச் தேதியில் இருந்து புதிய எல்.எச்.பி. (LHB) பெட்டிகளுடன் இயங்க துவங்கியுள்ளது.

Advertisement
Lazy Placeholder

இந்த சொகுசு ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் கூறியதாவது:-

ஏழுமலையானை பார்க்கச் செல்லும் மக்களின் பயணம் சிறப்பாக அமைய பல வசதிகளை இந்த ரயிலில் ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.

Advertisement
Lazy Placeholder

இந்த LHB சொகுசு பெட்டிகளில் நீண்ட நேரம் பயணித்தாலும் உடல் சோர்வு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஜெர்மனிய தொழில்நுட்பத்தினால் ஆன இந்த பெட்டிகளில் உயர் தர குளிர்சாதன வசதி (AC), பாதுகாப்பான டிஸ்க் பிரேக், மற்றும் சிறப்பான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் சேவையின் விவரங்கள் பின்வருமாறு:-

கோவையிலிருந்து திருப்பத்கிக்கு செவ்வாய், வியாழன், வெள்ளி, மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

திருப்பதி முதல் கோவை நோக்கி திங்கள், புதன், வியாழன், மற்றும் சனி ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

இந்த வசதிகள் கோவை மக்களின் அனுபவத்தை உயர்த்துவதுடன், அதிக பாதுகாப்பும் வழங்கும். திருப்பதி செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மேம்படுத்தப்பட்ட சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Recent News

Latest Articles