கோவை: வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவுக்கு, அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால், எதிர்ப்புகளை மீறி நேற்று முதல் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, வக்பு சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மத்திய அரசு இதனைத் திரும்பப் பெறாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.