Header Top Ad
Header Top Ad

மருதமலையில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது!

கோவை: மருதமலையில் சாமியார் வேடமணிந்து வெள்ளி வேல் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 4ம் தேதி நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, சாமியார் வேடத்தில் வந்த நபர் ஒருவர் மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை அடி உயரம் கொண்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேலை திருடிச் சென்றார்.

போலீஸ் பாதுகாப்பு இருந்த நேரத்தி வெள்ளி வேல் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது. அதில், சாமியார் வேடத்தில் வந்தவர் வேலை திருடியது தெரியவந்தது.

Advertisement

அந்த காட்சியை இங்கே காணலாம்:-

இதனிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வந்த நிலையில், இன்று வெள்ளி வேல் திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Recent News