கோவை: தங்கம் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று பவுனுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது.
கடந்த 3ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,400க்கு விற்பனையானது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் விலை சரிவைச் சந்தித்து, கடந்த 8ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,225க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே நேற்று காலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.67,280க்கு விற்பனையானது.
இந்த சூழலில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.150 (பவுனுக்கு ரூ.1,200) அதிகரித்துள்ளது.
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,560க்கும் ஒரு பவுன் ரூ.68,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.