கோவை: ஜெய்லர் 2 ஷூட்டிங்கிற்காக கோவை வந்த ரஜினிக்கு விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஜெய்லர் 2 படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கோவை வந்தார். முன்னதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குமரி அனந்தன் இறப்புக்கு இரங்கல் மற்றூம் குட் பேட் அக்லி படத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜெயிலர் 2 படப்பிடிப்பு கோவையில் 20 நாட்கள் நடைபெறும், படம் வெளியீடு தேதி இன்னும் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விமான நிலையத்தில் திரண்டு இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காரில் ஏறி ரஜினிகாந்த் கை காண்பிக்கவே அங்கிருந்த ரசிகர்கள் “தலைவா தலைவா” என்று முழக்கமிட்டு உற்சாகமடைந்தனர்.