கோவை: தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை ஏப்ரல் 3ம் தேதிக்குப் பிறகு விலை சரிவைச் சந்தித்து வந்தது. இதனால், தங்கம் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 9ம் தேதி பவுனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.8,290க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினமே மீண்டும் ரூ.960 அதிரடியாக உயர்ந்தது.
ஏப்ரல் 10ம் தேதி பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்தது. நேற்று மீண்டும் பவுனுக்கு ரூ.1,480 அதிகரித்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,560க்கும், ரூ.70,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,400 அதிகரித்துள்ளது. தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவது மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.
18 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.58,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.