பாலியல் வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது!

கோவை: போக்சோ வழக்கில் சிக்கிய மத போதகர் ஜான் ஜெபராஜை மூணாறில் வைத்து கோவை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே கடந்த ஆண்டு இவர் தனது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் அளித்த புகாரில் காட்டூர் அனைத்து மகளிர் போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால், அவர் தலைமறைவானார். ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

தலைமறைவான அவரை தேடி வந்த கோவை போலீசார், அவர் மூணாறு பகுதியில் இருப்பதை அறிந்து, அங்கு சென்று, ஜான் ஜெபராஜை கைது செய்து, காந்திபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp