புதுப்பொலிவுடன் கோவை குற்றாலம்; இன்று ஒரே நாளில் 4,500 பேர்!

கோவை: சாலை பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 4,500 பேர் குவிந்தனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவை குற்றாலம் கோவையின் பிரதான சுற்றுலாத்தளமாக உள்ளது. கோவை உட்பட பல்வேறு மாவட்டங்கள, மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

Advertisement

இதனிடையே கோடை சீசனை முன்னிட்டு குற்றாலம் செல்லும் சாலைகள், அருவி அருகே உள்ள தடுப்புகளை சரிசெய்யும் பணியை வனத்துறை முடுக்கிவிட்டது.

இப்பணிகள் காரணமாக கோவை குற்றாலம் கடந்த 9ம் தேதி மூடப்பட்டது. 4 நாட்களில் 90% பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று கோவை குற்றாலம் திறக்கப்பட்டது.

இங்குள்ள நீர் வீழ்ச்சியில் மிதமான அளவில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப்பயணிகள் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலாப் பயணிகள் நீர் வீழ்ச்சிக்குச் சென்று வர கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டன. வனத்துறையினர் இந்த அருவியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

Advertisement

விடுமுறை முடிந்த முதல் நாளிலேயே கோவை குற்றாலத்தில் சுமார் 4,500 பேர் நுழைவுக் கட்டணம் செலுத்தி அருவியில் சென்று ஆனந்தமாகக் குளித்து மகிழ்ந்தனர்.

கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இவ்வாளகத்தை தூய்மையாகப் பரமாரிக்க ஒத்துழைப்பு நல்குமாறு வனத்துறையினர், நியூஸ் க்ளவுட்ஸ் வாயிலாகக் கேட்டுக்கொண்டனர்.

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...