மாடியில் நடைப்பயிற்சி செய்கிறீர்களா கவனம்; கோவையில் முதியவர் பரிதாப பலி!

கோவை: பீளமேட்டில் 3வது மாடியில் நடைப்பயிற்சி சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீளமேடு அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கே மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 72 )மற்றும் அவரது மனைவி வனஜா குமாரி ஆகியோர் அவர்களது மகள் வீட்டில் குடியிருந்து வந்தனர்.

தினமும் இருவரும் காலை-மாலை நேரத்தில் குடியிருப்பின் 3வது மாடியில் உள்ள மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் இருவரும் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி சென்று உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராஜேஸ்வரன் திடீரென கால் இடறி மொட்டை மாடியில் கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிய அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வனஜா செல்வி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp