வரும் வாரத்தில் 2 நாட்கள் கோவையில் மழைக்கு வாய்ப்பு; நீலகிரி, ஈரோட்டிற்கும் மழை!

கோவை: வரும் வாரத்தில் 2 நாட்கள் கோவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவையில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த வகையில் மலைப்பகுதிகளில் லேசான மழையும், நகரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல், மிதமான மழைப்பொழிவு காணப்பட்டது.

இதனிடையே அடுத்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி மே 5ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:-
  • கோவை
  • நீலகிரி
  • தேனி
  • திண்டுக்கல்
  • கரூர்
  • மதுரை
  • விருதுநகர்
  • தென்காசி
  • திருநெல்வேலி (மலைப்பகுதிகள்)
மே 6ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:-
  • கோவை (மலைப்பகுதிகள்)
  • நீலகிரி
  • ஈரோடு
  • தேனி
  • கரூர்
  • தென்காசி
  • மயிலாடுதுறை
  • திருவாரூர்
  • நாகப்பட்டினம்
  • புதுக்கோட்டை
  • தஞ்சாவூர்

ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

Recent News

Latest Articles