கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள டாப் 10 பள்ளிகளை இந்த தொகுப்பில் காணலாம்.
பொதுவாக, ஏப்ரல், மே மாதங்கள் என்பது பள்ளிகளில் சேர்க்கை மாதங்களாக இருக்கும். கோவையில், பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், எந்தப் பள்ளிகளில் தனது குழந்தைகளைச் சேர்ப்பது என்பது பெற்றோருக்கு புரியாத புதிராக உள்ளது.
கல்வியின் தரம், கட்டணம், பள்ளியின் கட்டமைப்பு, பேருந்து உள்பட அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் பள்ளியைத் தேர்வு செய்வதற்கான முதன்மை காரணமாகும்.
அந்த வகையில், கோவை மக்களுக்காக, சிறந்த கல்வி, கட்டமைப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, டாப் 10 பள்ளிகளின் விபரங்களைச் சேகரித்துள்ளோம். அதன் விபரம்
எஸ்.எஸ்.வி.எம்., (CBSE) பள்ளி – வெள்ளலூர், உப்பிலியபாளையம்

உயர்தர கல்வி மற்றும் சிறந்த கல்வி செயல்திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள பள்ளியாக எஸ்.எஸ்.வி.எம்., உள்ளது. இங்கு உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜே,இ.இ., உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.
ஸ்டேன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி – அவினாசி சாலை

ஸ்டேன்ஸ் நர்சரி பள்ளிகள், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ, இந்தியன் பள்ளி, ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ., ஸ்டேன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 3,000க்கும் அதிகமான மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.
பி.எஸ்.ஜி., பப்ளிக் ஸ்கூல் – பீளமேடு
பி.எஸ்.ஜி., பப்ளிக் ஸ்கூல்ஸ் என்பது பீளமேடு, அவினாசி சாலையில் அமைந்துள்ள ஒரு இணை கல்வி உயர்நிலைப் பள்ளி. இங்கு ப்ரீ கேஜி முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி – வெள்ளக்கிணறு
துடியலூர் -சரவணம்பட்டி சாலையில் அமைந்துள்ள இந்தப் பள்ளியானது, கோவையில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளிகளின் தரவரிசையில் முதலிடத்தையும், தமிழக அளவில் 3வது இடத்தையும் கொண்டுள்ளது. தேசிய அளவில் 15வது சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது.
சுகுணா பிப் – காளப்பட்டி சாலை

காளப்பட்டி நேரு நகரில் அமைந்துள்ள சுகுணா பிப் பள்ளியானது, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. மழலையர் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பயிலுகின்றனர்.
ஜி.டி., பள்ளி – கோபாலபுரம்
கோவையின் மையப்பகுதியான கோபாலபுரத்தில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. நர்சரி வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் மாணவர்கள் சேர்க்கை உண்டு. மாநில பாடத்திட்டத்தின் கீழ் இந்தப் பள்ளி செயல்படுகிறது.
தி இண்டியன் பப்ளிக் ஸ்கூல் – எஸ்.எஸ்., குளம்
TIPS எனப்படும் தி இண்டியன் பப்ளிக் ஸ்கூலில் கேம்பிரிட்ஜ் IGCSE, கேம்பிரிட்ஜ் AS மற்றும் A லெவல் மற்றும் இன்டர்நேஷனல் பாக்கலூரியேட் (IB) போன்ற பல கல்வித் திட்டங்கள் வழங்கப்படுகிறது.
நேஷனல் மாடல் – பீளமேடு
நேஷனல் மாடல் பள்ளியானது சமச்சீர் மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களில் செயல்படுகிறது. 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.