Header Top Ad
Header Top Ad

கோடையை முன்னிட்டு அரசு சார்பில் ஏசி வழங்கப்படுகிறதா?

கோவை: கோடை காலத்தை முன்னிட்டு மத்திய- மாநில அரசுகள் சார்பில் மானிய விலையிலும், இலவசமாகவும் ஏசி வழங்கப்படுவதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ஒரு கும்பல் இதனைப் பயன்படுத்தி தகவல்களைத் திருடி நூதன மோசடியை அரங்கேற்றி வருகிறது.

Advertisement
Lazy Placeholder

அதாவது, கோடை காலத்தை முன்னிட்டு, மத்திய-மாநில அரசுகள் சார்பில் இலவச மற்றும் மானிய விலையில் ஏசி வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற தகவல் சமுக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அரசு அத்தகைய திட்டங்கள் எதையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், மோசடி ஆசாமிகள் ரீல்ஸ் மூலம் இதுகுறித்து விளம்பரம் செய்கின்றனர். மேலும், அவர்கள் குறிப்பிடும் இணையதள பக்கத்திற்குச் சென்றால் அச்சு அசலாக அரசின் இணையதளம் போலவே காணப்படுகிறது.

இதனை நம்பி ஏமார்ந்து பொதுமக்கள் அந்த இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவேற்றி வருகின்றனர்.

Advertisement
Lazy Placeholder

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

தமிழக அரசு சார்பில் இலவச ஏசி வழங்கப்படுவதாக நூதன முறையில் மோசடி நடைபெறுகிறது. இத்தகவல் பொய்யானது.

இலவச ஏசி பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுமெனக் கூறி பொதுமக்களின் தகவல்கள் திருடப்படுகின்றன. அரசு இணையதளம் போல போலியாக இணையதளத்தை வடிவமைத்து, ரீல்ஸ் மூலம் அதனை விளம்பரம் செய்து மோசடி நடைபெறுகிறது.

எனவே போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்.

இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனவே மக்களே அறிவிக்காத திட்டத்திற்கு விண்ணப்பித்து பணம் மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை இழந்துவிட வேண்டாம். எச்சரிக்கை.

Recent News

Latest Articles