கோவையில் ஹோட்டல் சிக்கன் குழம்பில் பல்லி: மொத்தமும் பொய் என்று குற்றச்சாட்டு… போலீஸ் விசாரணை!

கோவை: உணவில் பல்லி இருந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

கோவை ஆர்.எஸ் புரம் அருகே வி.சி.வி லேஅவுட் பகுதியில் கோவை பிரியாணி என்ற உணவகத்தில் கடந்த 27 ம் தேதி சிலர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது அவர்களில் ஒருவர் பிரியாணியில் ஊற்றிய சிக்கன் குருமாவில் பல்லி இறந்து கிடப்பதாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து ஒரு நாள் கழித்து பல்லி கிடந்ததாக நடந்த சம்பவம் ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்ற தகவல் ஹோட்டல் உரிமையாளருக்கு கிடைத்ததாக ஹோட்டல் உரிமையாளர் உமாபதி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நடைபெறப்போகும் சம்பவத்தை
முன் கூட்டியே பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்த நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp