ஜாக் அமைப்பினரின் பக்ரீத் சிறப்பு தொழுகை- கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு…

கோவை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்…

இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக போற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன்படி கோவையிலும் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா ஹாலில் இந்த சிறப்பு தொழுகை நடைபெற்றது.

அதிகாலை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் கூடி சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.

இந்நாளின் முக்கிய நிகழ்வாக ஆடு மாடுகளை பலியிட்டு மூன்று பங்குகளாக பிரித்து உறவினர்கள், நண்பர்களுக்கு அளித்து பகிர்ந்து உண்வர். மேலும் இஸ்லாமியர்களில் பெரும்பான்மை அமைப்பினராக கருதப்படும் சுன்னத் ஜமாத்அமைப்பினர் நாளைய தினம் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொள்வர்.

Recent News

Video

Join WhatsApp