Header Top Ad
Header Top Ad

ஈமு கோழி மோசடியில் குற்றவாளிக்கு தண்டனை அளித்த கோவை நீதிமன்றம்…

கோவை: ஈமூ கோழி வளர்ப்பு மோசடி தொடர்பான வழக்கில் சுசி ஈமூ குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, 8 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஈரோட்டைச் சேர்ந்த குருசாமி(49) ஈமூ கோழி வளர்த்தால் அதிக லா பம் பெறலாம் என்று கூறி பொதுமக்களிடம் முதலீட்டை ö பற்று மோசடியில் ஈடுபட்டார்.
சுசி ஈமூ பார்ம்ஸ் என்ற பெயரில் ஈமூ கோழி வளர்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்த குருசாமி சேலம் ஐந்து ரோடு சிக்னல் அருகே கிளை துவங்கி, பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்றார். இந்த கிளையில் கதிர்வேல்(67) , சுரேஷ்(52) பணிபுரிந்தனர்.

Advertisement
Lazy Placeholder

இவர்கள் ஈமூ கோழி வளர்த்தால் லாபம் பெறலாம் என்று ஆசை காட்டி தங்களிடம் பண மோசடி செய்ததாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 2012 ம் ஆண்டு 385 முதலீட்டாளர்கள் புகார் செய்தனர்.
இந்த வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இதில் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 7 கோடியே 89 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

அபராத தொகையில் 7 கோடியே 89 லட்சத்தை முதலீட்டாளர்கள் 385 பேருக்கு பிரித்துக் கொடுக்கும்படியும் கோர்ட் உத்தரவிட்டது.
கதிர்வேல், சுரேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

Recent News

Latest Articles