Header Top Ad
Header Top Ad

கோவையில் பக்ரீத் கொண்டாட்டம்; சிறப்புத் தொழுகை! – Photos

கோவை: நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் கரும்புக்கடையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் , தனது மகனை இறைவனுக்காக பலியிட முன் வந்த தியாகத்தை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள்.

இதனிடையே இன்று காலை 7.30 மணி அளவில் கோவை கரும்புக்கடை இஸ்லாமிக் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் தொடங்கிய இந்த சிறப்பு தொழுகையில், ஆண்கள் பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கோர் கலந்து கொண்டனர்.

இந்த தொழுகையில் மஸ்ஜித் இஹ்ஷான் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி இஸ்மாயில் இம்தாதி சிறப்புத் தொழுகை நடத்தி சொற்பொழிவு நடத்தினார்.

Advertisement

இந்த தொழுகையின் போது புத்தாடை அணிந்து, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மேலும், இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆடு,மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து குர்பானி கொடுக்கும் நிகழ்வும் இன்று நடத்தப்படுகிறது.

ஆடு, மாடு போன்றவற்றை பலியிட்டு அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழை, எளியவர்களுக்கும், 3வது பங்கை தங்களுக்கும் என பகிர்ந்து உண்டு, பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.

Recent News