கோவை: கோவையில் பயணி ஒருவர் விட்டுச்சென்ற நகை, பணத்தை ஒப்படைத்த டாக்சி ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவையைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் ரெட் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுனராக பயணி புரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது டாக்சியில் பெண் ஒருவர் பயணித்துள்ளார். டாக்சியை விட்டு இறங்கிய அந்த பெண் தனது கைப்பையை அங்கேயே மறந்து விட்டுச் சென்றார்.
பணி முடிந்து சென்ற சம்பத்குமார் காரில் இருந்த பையைப் பார்த்த போது, அதில் 15 பவுன் நகைகள். ரூ.10,000 ரொக்கம் இருந்தது.
தொடர்ந்து சம்பத்குமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் உதவியுடன் நகை மற்றும் பணத்தை அந்த பெண்ணிடம் ஒப்படைத்தார்.

டாக்சி டிரைவரின் நேர்மையை அறிந்த கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், அவரை நேரில் அழைத்து, பொன்னாடை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து, காவல் அதிகாரிகளும், பொதுமக்களும் சம்பத்குமாரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.