Header Top Ad
Header Top Ad

கோவையில் கட்டு, கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்கள் : வாலிபர் கைது – நான்கு பேர் தப்பி ஓட்டம் !!!

கோவை: கோவை, கருமத்தம்பட்டியில் கட்டு, கட்டாக கள்ள ரூபாய் நோட்டுக்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Advertisement
Lazy Placeholder

கோவை – திருப்பூர் மாவட்டம் எல்லையில் கருமத்தம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக பையுடன் ஒரு வாலிபர் வந்தார். அவரை மடக்கி பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவரிடம் 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டு, கட்டாக இருந்தன. ஆனால் கள்ள ரூபாய் நோட்டுக்கள் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டு இருந்தது.

கள்ள ரூபாய் நோட்டுகளின் இடையில் வெற்று தாள்கள் சொர்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து அந்த ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்மபுரியை சேர்ந்த இளவரசன் என்பதும், அவர் கருமத்தம்பட்டி சாரதா மில் சாலை அருகே ஒரு வீட்டில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவருடைய வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கும் கட்டு, கட்டாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. அதில் 13 பண்டல்கள் 2,000 ரூபாய் நோட்டுகள் 5 பண்டல்கள் 5,00 ரூபாய் நோட்டுகள் மற்றும் வெட்டப்படாத 2,000 ரூபாய் நோட்டுக்கள் 12 பண்டல்களும், வெட்டப்படாத 5,00 ரூபாய் நோட்டு பண்டல்கள் 13 இருந்தன. அவற்றையும் அதிநவீன பிரிண்டர்கள் செல்போன்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Advertisement
Lazy Placeholder

ரூபாய் 50 ஆயிரம் அசல் ரூபாய் நோட்டு கொடுத்தால், ரூபாய் 2 லட்சம் மதிப்பு உள்ள கள்ள நோட்டுக்கள் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

இரட்டிப்பு பணம் தருவதாக, கூறி ஒரு பக்கமாக மட்டும் ரூபாய் நோட்டு வடிவில் அச்சடித்து மோசடி செய்ய முயன்று உள்ளனர். எனவே இளவரசனை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அய்யம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்குமாரிடம் மோசடி செய்ய முயன்ற போது இளவரசன் காவல் துறையிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அவருக்கு உடனடியாக இருந்த உதயகுமார், தயா என்ற குமரேசன், லோகநாதன் செந்தில் ஆகிய நான்கு பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

இரண்டு கோடி ரூபாய் என மதிப்பிடத்தக்க அளவுக்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recent News

Latest Articles