கோவை, நீலகிரி, திருப்பூர்: இன்று மழை எப்படி?

கோவை: கோவை, நீலகிரி, திருப்பூர் உட்பட 7 மாவட்டங்களில் இன்று மழை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று கோவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

Advertisement

இதனிடையே இன்று, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கோவை நகரில் இன்று மதியம் வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மலைப் பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மதியத்திற்கு மேல் மழை எப்படி இருக்கும் என்பதை, வானிலை மையம் வழங்கும் அடுத்த அப்டேட்டின் அடிப்படையில் தெரிவிக்கிறோம்.

Recent News

வடகிழக்கு பருவமழை- பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வலியுறுத்தல்…

கோவை: வடகிழக்கு பருவமழை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 146.04 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும்,...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group