கோவை விமான நிலையத்தில் பெண்ணிடம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்!

கோவை, விமான நிலையத்தில் பெண் ஒருவரிடம் இருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் இன்று காலை வழக்கமான சோதனைகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில்
பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணி சரளா ராமகிருஷ்ணன் என்பவரின் உடைமைகள் சோதிக்கப்பட்டது.
அப்பொழுது அவர் கொண்டு வந்த பையில் 9 mm வகை தோட்டா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து சரளா ராமகிருஷ்ணன் என்ற அந்த பெண் பயணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பீளமேடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெங்களூருக்கு கிளம்பிய பொழுது துப்பாக்கி தோட்டா இருந்தததை கவனிக்காமல் எடுத்து வந்ததாக கூறிய நிலையில் அவரிடம் பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp