Rain Alert: கோவை மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலெர்ட், ரெட் அலெர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இன்று கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் (மிக கனமழை) விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருந்த நீலகிரி மாவட்டத்திற்கு தற்போது ரெட் அலெர்ட் (அதி கனமழை) விடுக்கப்பட்டுள்ளது. நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் தொடர்கிறது.
கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளையும் மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




