பல்லடத்தில் கோர விபத்து! 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி! – வீடியோ காட்சிகள்

திருப்பூர்: பல்லடத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நால்ரோடு சந்திப்பில் இன்று மதியம் கன்டெய்னர் லாரி ஒன்று கோவையில் இருந்து பல்லடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியை டிரைவர் திருப்ப முயன்றுள்ளார்.

Advertisement

ஆனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்தவர்கள் மீது மோதியபடி சாய்ந்தது. இதில் சாலையோரம் நின்றிருந்த மகாராணி, ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த கிருத்திகா ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், கிரேன் உதவியுடன் லாரியின் கன்டெய்னர் தூக்கி பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். தற்போது விபத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Recent News