கோவையின் 2வது ஸ்டேஷன்: போத்தனூர் ரயில் நிலையத்திற்கு ரூ.100 கோடி! அதிகாரி தகவல்

கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்த பிறகு 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவை போத்தனூர் ரயில் நிலையம் இரண்டாம் முனையமாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு அடைந்தவுடன் புதிய ரயில் சேவைகள் இங்கு இருந்து துவங்க உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்து உள்ளார்.

அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மின் தூக்கிகள், நடைபாதைகள், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இது குறித்து அவர் கூறும் போது, போத்தனூர் ரயில் நிலையம் இரண்டாவது முனையமாக தரம் உயர்த்தப்படுகிறது. அதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 3 ஆண்டுகளில் இப்பணிகள் நிறைவடையும், இரண்டாம் முனைமாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் போத்தனூரில் இருந்து புதிய ரயில் சேவைகள் துவங்கப்படும் என தெரிவித்தார். 

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் போல, கோவை போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும் என இங்கு உள்ள தொழில் முனைவோர்கள், ரயில் பயணாளிகள் கோரிக்கை வைத்து வந்து வரும் நிலையில், விரைவில் பணிகள் துவங்கி மூன்று 3 ஆண்டுகளில் நிறைவு அடையும் என பொது மேலாளர் தெரிவித்து உள்ளது, இதனால் ரயில் பயணாளிகள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்- கோவையில் அஞ்சலி…

கோவை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8ம் ஆண்டு...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...