கோவை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கோவை: கோவை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக காலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்றும் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோவையின் மேற்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp